Tuesday, 16 September 2025

கூத்தாநல்லூரின் FOOTBALL LEGEND H.R. NOOR MOHAMED..


'எச்சார்' பும் இன்றி பழகும்
HR எனும் பண்பாளர்..
~~~~~~~~
பணம் பெற்றவரானாலும்
அற்றவரானாலும்,வயதில்
பெரியோரானாலும்,அவர் சிறியோரானாலும்,கல்வி
கற்றவரானாலும், அறவே
கல்லாதவரானாலும்
'எச்சார்'பும் இன்றி பழகும்
HR எனும் பண்பாளரே...

கால்பந்து பயிற்சின்போது
அறியாததை வினவி தெளிவு
பெறும் மனம் வேண்டும் என்பீர்.
தோல்வி கண்டு துவளாத 
குணம் வேண்டும் என்பீர்.எதிர்
அணியின் தவறை கண்டு சினம் கொள்ளாமல்,வெற்றிக்கு வேண்டி
ஆடும் திறன் வேண்டும் என்பீர்..

அன்று கற்றது விளையாட்டிற்கு
மட்டுமல்ல,வாழ்விற்கும் என்பதை இன்று கற்றுணர்ந்தோம்.இன்னும்
பல கற்றோம் உம்மிடம்.தொடர்ந்து
உம்மிடம் கற்போம்.அதை 
பிறருக்கும் கற்பிப்போம்

அன்று கற்பித்து எம்மை 
புதுப்பித்த எங்கள் ஆசானே..!
நீங்கள் பிறந்த இந்த நன்னாளில்
வாழ்த்தி இறைவனிடம் உம்
நலவாழ்விற்கு கையேந்தி துஆ செய்கின்றோம்..

No comments:

Post a Comment