Thursday, 5 November 2015

அண்ணன் யாசீனே !



அண்ணன் யாசீனே !

எங்கள் ஆசானே! அண்ணனாய் தோள் கொடுத்தாய்!
நண்பனாய் கை கொடுத்தாய்!!
குருவாய் திசை காட்டி எங்களின் 
நல் வாழ்க்கைக்கு ஒளி காட்டி வழி கொடுத்தாய் !!
வாழ்க்கையே ஒரு விளையாட்டு  அதன் மோகத்திற்கும் ,
தாகத்திற்கும்  உற்சாகமாய்  தலையாட்டு 
என்ற வாலிப உந்துதலை நெறி படுத்தி ,நேர்படுத்தி 
எங்களை சீர் படுத்திய செம்மலே!!
 விளையாட்டின் மூலம்  மனிதத்தை அதன் 
மகத்துவத்தை,சமத்துவத்தை வாழ்க்கையின்
தத்துவத்தை கற்பித்த வித்தகனே!!
அய்யப்பனும்,அலியும்,
இளங்கோவும்சகாயமும், இஸ்மாயிலும்,
பாண்டியும், மாலிக்கும்,
நாங்களும் நீ போதித்த ஒருமை பாட்டின் 
வழி நடந்து கைகோர்த்து  சாதித்த அடையாளம் தான் 
அரசினர் பள்ளி எழுபத்து எட்டில்  வென்றெடுத்த
ஆளுயர  பார்த்த சாரதி கோப்பை!! விளையாட்டு ஒரு புரிந்துணர்வு !! விளையாட்டு ஒரு புத்துணர்வு !!
விளையாட்டு நட்பின் பிணைப்பு!
விளையாட்டு அன்பின் இணைப்பு !
என சொல்லி எங்களை செதுக்கிய  சிற்பியே !!
 நீ கற்பித்த பாடங்கள் இன்றும்  எங்களை வழிநடத்துகிறது ,
எங்கள் ஆசானே!அது எங்கள்  பிள்ளைகளையும் வழிநடத்தும்..

1 comment:

  1. காலையில் கண்விழித்து கவிஞரின் வரிகளை படித்த போது கண்கள் குளமாக்கி நெஞ்சம் ஈரமானது அது வெறும் வார்த்தைகள் அல்ல உள்ளத்திலிருந்து உதித்த உண்ர்வுகள், ஆசானை நேசித்த ஒரே மாண்வர்கள் கூட்டம நாமாக தான் இருக்க் முடியும் காரணம் அந்த ஆசான் நம்மை நேசித்த விதம்.
    அல்லாஹ் அவர்கள் பொருந்தி கொண்டு சுவனபதியை தந்திட துஆச் செய்வோம்

    ReplyDelete