நிம்மதியை இழந்து,அதை
சந்நிதியில் தேடும்,பணம்
படைத்தவன் தான்,
உன் கதியை கண்டு,ஐயோ,
பாவம் என்பான்!!
உன்னிடம் இழக்க ஒன்றும்
இல்லை,கொடுக்க ஆயிரம் உண்டு!
கோடியில் புழங்குபவன்
உன் நாடியில் ஓடும் கருணையை
பரிவை, அதன் விலையை அறியாதவன்!!
அன்பாய்,ஆதரவாய் உன்
தங்கையோடு,ஆழ்கடலின்
அமைதி போன்று நீ உறங்கும்
அழகை கண்டபோது,உன்னை
ஆரத்தழுவ துடித்தேன்.முடியாததால்
கண்ணீர் என் விழிகளை தழுவி கொண்டது!!
No comments:
Post a Comment