Friday, 6 November 2015

மன்ப உலா பள்ளிக்கு பவள விழா!!

இரும்பை பொன்னாக்கும் இரசவாதம்
அறிந்த இரசவாதிகளா நம் முன்னோர்கள்!!
அவர்தம் பாதம் பட்டதால் தானோ
 நம் மன்ப உலாவும் ........ 25ம் ஆண்டில்
வெள்ளியாய்!! 50ம் ஆண்டில் தங்கமாய்!! 60ம் ஆண்டில் வைரமாய்!!
இன்று 75ம் ஆண்டில் பவளமாய் மாறி பீடுநடை போடுகிறது!!
கிடைப்பதற்கு அரிது இந்த பவள விழா!! நெஞ்சத்தில்
இடம் பிடித்த நம் மன்ப உலா பள்ளிக்கு வாய்த்தது அந்த பெருமை!!
அது நமது பெருமை, நமது ஊரின் பெருமை.
தொலை நோக்காய் நமது சமுதாய வளர்ச்சிக்காய்
கலங்கரை விளக்காய் இப்பள்ளியை தந்த நம் முன்னோர்களை
 நன்றியுடன் பார்கிறேன் !! எழுத்து அறிவித்தவன் இறைவன் என்பது முதுமொழி!! எங்களுக்கு அந்த எழுத்து அறிவித்த கூடமாய்,
வாழ்க்கை எனும் நதியில் நாங்கள் பயணிக்க உதவிய ஓடமாய்
 என்றும் எம்நெஞ்சில் உலா வரும் பள்ளி எங்கள் மன்ப உலா தானே!!
அது எங்கள் வாழ்க்கைக்கு ஒளியேற்றிய நிலா தானே!!
பலநாடுகளில் பல துறைகளில் மிளிரும் விண்மீன்களாய் பலர்,
மண்ணிலே வேருன்றி பலருக்கு நிழல் தரும் விருட்சங்களாய் சிலர்,
என எம்மக்களை கருவாக்கி உருவாக்கிய கருவறையே!!
கற்பக்கூடமே!! எங்கள் பள்ளி கூடமே!! மன்ப உலாவே!!
வெறும் கரியாய் இருந்த பலரை வைரமாய் பட்டை தீட்டி திக்கெட்டிலும்
 நம் நல்லூராம் கூத்தாநல்லூரின் புகழ்பரப்ப வித்திட்ட,
பவள விழா காணும் நம் பள்ளிக்கும் அதற்கு அடித்தளமாய்
உழைத்திட்ட சுயநலமில்லா ஆசிரிய பெருமக்களுக்கும் கோடானு கோடி நன்றிகள் !!

No comments:

Post a Comment