Monday, 23 March 2026

ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்.!

அஸ்ஸலாமு அலைக்கும்..

ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்.!
~~~~~~

புனித ரமலானில் மறை 
படித்து,நாதர் நபி உரை படித்து,அழுது, தொழுது
மனதை உழுது,ஈகைப் பெருநாளை
எட்டிவிட்டோம்
இறைவன் அருளால்...

இந்த நோன்பு பெருநாளில்
ஈகை உணர்வு மேலோங்கி,
இன்ப உணர்வு தழைத்தோங்கி
உலகோர் நெஞ்சங்களில்
மனித நேயம் மலரட்டும்..

வளைகுடா போரில் சிக்குண்ட 
நம் மக்கள்,இடரில் இருந்து மீளட்டும்,அவர்தம் நல்வாழ்வு நிலைப்பெற்று,நலம்பெற்று
இறை அருளோடு வாழட்டும்.

இணையில்லா வல்ல 
ரஹ்மான் நம் துஆக்களை
ஏற்று அருள் புரிவானாக.!

அனைவருக்கும் இதயம் 
கனிந்த ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்..

No comments:

Post a Comment