மதுரையை எரித்தாள்
கண்ணகி கோவலனுக்காக
வெக்கித்து உயிர் துறந்தான்
பாண்டிய மன்னன் அன்று
நெல்லையில் தன்னோடு
பிள்ளைகளையும் எரித்தான்
எசக்கி முத்து.வெக்கப்பட
யாருமில்லை இன்று..
த்த்தூ.!!.என்று துப்பி,எங்களை
பார்க்க மனமில்லாமல்
குப்புற விழுந்து உயிர் விட்ட
இரண்டே வயது சரண்யா..
கண்ணே.! எங்களை மன்னித்து
விடு.அபயம் தேடி உன் தந்தை
தட்டிய கதவுகள்,பணம்
உள்ளவனுக்கே திறக்கும் ..
காவல் துறையும் ,மாவட்ட
ஆட்சியரும், பணம் தின்னும்
கழுகுகள் என்று நினைத்தேன்
அவர்களோ பிணம் தின்னிகள்..
கொலைக்காரி கந்து வட்டி
முத்துலட்சுமியே,உன்னை
தூக்கிலிட வேண்டும்,ஆனால்
பாவி உனை தொட,தூக்கு
கயிறு கூட மறுத்து விட்டது ..
துப்பாக்கியியை அணுகினோம்
இதற்க்கு தீர்வு காண..
நிபந்தனையோடு சரியென்றது..
அரசாங்கம் அனுமதித்தால்
அதன் தோட்டாக்கள்,வினாடி
பொழுதில் சதிகாரியின் உடலை
துளைத்து,வெளியேறி விடுமாம்
உடலில் தங்க மனமில்லாமல்..
ஆனால்,ஆனால்,ஆனால்
வழக்கறிஞர்களின் வாத
பிரதி வாதங்களோடு,மல்லுக்கு
நிற்க போகும் நீதிமன்றம்..
எத்தனை ஆண்டுகள் ஆகுமோ
உனக்கு நீதி கிடைக்க;எங்களை
மன்னித்து விடு சரண்யா..!!
No comments:
Post a Comment