அன்னையர் தின வாழ்த்துக்கள்..!
~~~~~~~~
நீ தவழ்ந்தாலும்,தளர்ந்தாலும்
கைகொடுப்பவள்,பெற்ற தாய்
அன்றி வேறு யாருமுண்டோ.?
மனையாள் வந்த பின்,அவள்
துணையால் மகிழ்ந்த மகன்
பெற்ற தாயை மறந்த கதையை
கேளாதவர் ஊரிலுண்டோ.?
உன் வளர்ச்சியில் மகிழ்ந்தவளை
முதுமையில் வளைந்தவளை
நீ நிமிர்ந்த போது,முதியோர்கள்
இல்லத்தில் சேர்த்ததேனோ.?
பள்ளிக்கு அனுப்பியவளை
பள்ளி கொல்லைக்கு போன
பின், நினைத்து அழுவதால்
பயனேதும் உனக்குண்டோ?
நமக்காக துடித்திடும் அன்னையின்
இதயம் அடங்கிடும் முன்னே
அவளை துதித்திடுவோம்,உளமார
பாராட்டி,போற்றி மதித்திடுவோம்..
தியாக தாய்களுக்கு
என் அன்னையர் தின
வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment