Monday, 5 February 2018

உலக புற்று நோய் தினம்


பிப்ரவரி நாளாம் நாள்
உலக புற்றுநோய் தினம்  
நம்மீது பற்றோடு இருந்த
சிலர்,இப்புற்றோடு போன 
சோகத்தை எண்ணி பார்த்தேன்

போராளிகள் அவர்கள்தான் 
கதிர்வீச்சு ஒரு நாள்,கீமோ
தெரப்பி ஒருநாள்,தினம் தினம் 
உறவுகளின் கண்ணீரென்ற
எதிர்வீச்சு,பெரும் மூச்சு,எளிதில் 
தோற்கவில்லை அவர்கள்...

தொடக்கத்தில் கண்டறிந்தால்
எளிதில் நிவாரணம் உண்டாம்.. 
மீண்டெழுந்த யுவராஜும் 
நாமறிந்த கௌதமியும்,ஊரறிந்த 
மனிஷாவும் சொல்கிறார்கள்

வரும் முன் காப்பதே சிறப்பாம்.. 
புகையை பகையாக்கி,பொறித்த,
வறுத்த உணவோடு,மாமிசம் 
குறைத்து,வேதிப்பொருளோடு 
உலா வரும் பொருள் விளக்கி  
சுற்று சூழல் பேணி,உடற் பயிச்சி 
செய்து,தளர்ச்சி இன்றி வாழ்வோம்

வந்துவிட்டால் தான் என்ன?
மனசோர்வு வேண்டாமே.இறை
நம்பிக்கையும்,தன்னம்பிக்கையும்
மருத்துவத்தோடு இணைந்தால்   
எதிராய் செயல்படும் உயிர்
அணுக்கள் நம்மோடு இசையும்.
எதிர்வினை செய்யாமல் மறையும்

No comments:

Post a Comment