Thursday, 18 July 2019

புதுமனை புகுவிழா.


புதுமனை புகுவிழா..டாக்டர் அஷ்ரப் குடும்பத்தார்களுக்கு
எனது வாழ்த்துக்கள்....
************

எமதண்ணன் பதுருதீன் வாழ்ந்த 
இடம்,ஜாதி மத பேதமின்றி 
ஊரார்,நேசமுடன் சூழ்ந்த இடம் 
மறக்க இயலாத,நாங்கள் 
தவிர்க்க இயலாத இடமது..

உமதண்ணன் மீது நீ கொண்ட 
பாசத்தால்,அவர் பெயரில் அங்கே 
வீடமைத்து,அன்பினை காட்டிய 
உன் பண்பினை பாராட்டுகிறேன் 

அருள்மறையின் திருவசனம்
ஒலித்திட, பெரியோர்கள் 
நல்லோர்கள் வாழ்த்துக்களோடு
வெள்ளியன்று புதுமனையில் 
புக இருக்கும் அன்பு தம்பியே.! 

உமக்கும்,உமது மனைவியார்
மற்றும் பிள்ளைகளுக்கும் எனது 
இதயத்து வாழ்த்துக்கள்...

உம் இல்லத்தில்,இறையருள் என்றும்
நிலவட்டும்,பாச உணர்வுகள்
வளரட்டும்,இன்பம் என்றும்
பொங்கட்டும் ,அன்பும்,பண்பும்
தங்கட்டும்.செல்வம் நிரம்பட்டும்
என்ற என் உள்ளத்தின் அவாவை
துவாவாக அல்லாஹ்விடம்
கையேந்தி கேட்கின்றேன்..

No comments:

Post a Comment