Sunday, 15 November 2015

பட்டுப்போனவர்களா?? இல்லை நமக்கு பாடத்தை விட்டுப்போனவர்களா

பட்டுப்போனவர்களா?? இல்லை நமக்கு பாடத்தை விட்டுப்போனவர்களா?
இளம் வயது பெண் ஒருத்தி ஆண்
ஒருவனின் வசீகரத்தால் ஈர்க்கப்பட்டு,
காதலால் வீழ்த்தப்பட்டு,காமத்தால் உந்தப்பட்டு,
அது தந்த அவசரத்தால் அவனுக்கு வாழ்க்கைப்பட்டு,
பெற்றவர்களால் எதிர்க்கப்பட்டு
உறவுகளால் துண்டிக்கப்பட்டு ,
தொடங்கிய வாழ்கையில் அவள் இளமை சிதைக்கப்பட்டு,
வதைக்கப்பட்டு ,உதைக்கப்பட்ட போது,
அவன் சுயரூபம் மனதில் பட்டு,வேதனை பட்டு,
 வேகப்பட்டு,கோபப்பட்டு,வந்த சண்டையால்,
அவனால் தண்டிக்கப்பட்டு, துரத்தப்பட்டு
 வாழ்கையில் நஷ்டப்பட்டு உயிரை விட்டு
உலகத்தை விட்டு போனவர்கள் பலர்.
 பட்டாம் பூச்சிகளாய் சிறகடித்து பறக்க ஆசைப்பட்டு
பட்டு போன காதல் ரோசாக்கள் இவர்கள்
 ஆண் ஒருவன் ஆசைப்பட்ட பெண் ஒருத்தியை மனம்
முடித்து சொகுசாய் வாழ அவள் சொல்லுக்கு உடன்பட்டு,ஆடம்பர வாழ்க்கைக்கு அடிமை பட்டு அதனால் கடன்பட்டு அதன் சுமையால் அழுத்தப்பட்டு அதனை அடைக்க
வெளிநாடு புறப்பட்டு அங்கு உழைத்து உடை எல்லாம் கரை பட்டு ,
சிறிய அறையில் அடைபட்டு,கண்ட கனவுகள் எல்லாம் தடைபட்டு , வாலிபத்தை தொலைத்து வருத்தப்பட்டு,வாழ்கையின் ஓட்டத்தில் பகடையாய் உருட்டப்பட்டு வேதனைக்கு உட்பட்டு,
நோய்ப்பட்டு மரண பட்டு போனவர்களும் உண்டு.. இப்படி பட்டுப்போனவர்களும் கெட்டுப்போனவர்களும்
 வாழ்கையின் பாடத்தை நமக்கு விட்டுப்போனவர்கள் நான் காதலுக்கு எதிரானவன் இல்லை.இது போன்ற சாதலுக்கு எதிரானவன்

1 comment:

  1. கவிஞரே கவிதை மிக அருமை இதை படிப்பவர்கள் இனி அவசரப்பட்டு காதலில் அகப்பட்டு விடமாட்டார்கள்

    இக் கவிதை கவியாக எழுதப்பட்டது அல்ல அனுபவபட்டது போல்
    எழுதப்பட்டு இருக்கின்றது.

    ReplyDelete