Thursday, 18 April 2024

தாய் திருநாட்டை, MY இந்தியா என்று சொல்வதில் நமக்கெல்லாம் பெரு மை.


இடக்கை விரலில் மை' ஏந்தி,
ஜனநாயக தன் மை'யோடு,
வறு மை இல்லா நாடெனும் 
பெரு மை யோடு நாடு வாழ 
வாக்களித்த வாக்காளர்களே..

நல்ல தலை மை கொண்ட,
தன் கட மை உணர்ந்த அரசு
மக்கள் உட மை காத்து 
உரி மை போற்றும் அரசு 
கய மை இல்லா, மட மை 
இல்லா,திற மை மிக்க அரசு 
அ மை ந்திட பிரார்த்திப்போம்..

மத நல்லிணக்கம் இன் மை 
நாட்டிற்கு பெரும் கேடாகும் 
சாந்திமிகு தேசமே எளி மை 
மிக்க இந்தியனின் கனவாகும்..

இடக்கை விரலில் மை 'யை 
ஏற்று நாம் தேர்ந்தேடுக்கும் 
அரசு,பன் மை  தன் மை
கொண்ட, வள மை மிக்க  
தேசத்தை கட்ட மை க்க 
பாடுபாடுமென்று நம்புவோம்..



உண் மை யுடன்...
அவராத்தர் சிராஜ்..

No comments:

Post a Comment