முனை முறிந்த கட்சிகள் சில
துணைத் தேடி அலைய..
நான்குமுனை போட்டியை
எதிர்கொள்ளும் தமிழகம்..
வெறுப்பை கக்கும் விஷச்
செடிகளை நாடெங்கும்
பயிரிட்டு,தேர்தலின் போது
அறுவடை செய்வதற்கு
காத்திருக்கும் ஒரு கட்சி..
விஷச்செடியை வெட்டிடும் கோடாரியாய்,குரலற்றவன்
குரலாய்,நாதியற்றவனின்
தாகம் தீர்க்கும் நதியாய்,
ஆதரவு 'கை' நீட்டும் ஒரு கட்சி..
அறியாமை இருளகற்றும் சூரிய
ஓளியாய்,திக்கற்ற மக்களை
கரை சேர்க்கும் படகாய்,தளபதி தலைமையில் ஒரு கட்சி..
ஒழுங்கீன குற்றம் சாட்டி
ஒருங்கிணைப்பாளரை
ஓரங்கட்டி,வண்ணம் இழந்த
இலைகளோடு ஒரு கட்சி..
தமிழ் தேசியம் பேசி, 'சீட்' டணி வேண்டாம் என்று கூட்டணி
மறுத்து,வெறும் ஓசையை
பாசையாய் கொண்ட ஒரு கட்சி..
தேர்தல் நேரத்தில் சண்ட
மாருதம் வீசிடுமா? இல்லை
தகிக்கும் பரப்புரையால்
தேர்தல் களம் கொதித்திடுமா?
பொறுத்திருந்து பார்ப்போம்..
கடந்தகால ஆட்சியாளர்கள்
செய்தது பசுமை புரட்சி..இன்று
மத்தியில் ஆளுபவர்கள்
செய்வதோ பகைமை புரட்சி..
காவியரசு பாமரன் தலையில்
அம்மி அரைக்க,அதைக்கண்டு
பல கோமான்கள் கும்மியடிக்க,
எலும்புக்கு வாலாட்டும் சில
ஜிம்மிகளின் ஆரவாரக் கூச்சல்
தமிழ் மண்ணில் கேட்கின்றது
பெரும்பான்மை வாதம்,
தனியார்துவவாதம்,ஊழல்
வாதம்,மதவாதம் போன்ற
பல முடக்கு வாதங்கள்
நாட்டை முடக்கிவிட்டன..
இந்த வாதங்களை போக்க
கூட்டணி ஒன்று உருவானது..
அது தேச வளர்ச்சிக்கான கூட்டணி,பிணி அகற்ற வந்த
முற்போக்கு INDIA கூட்டணி..
பீடித்துள்ள பிணிகளுக்கு
மருந்திடுவோம்..பீடைகளை
ஒழித்திடுவோம்..தேசத்தின்
வளர்ச்சிக்கு INDIA கூட்டணிக்கு
மறவாது வாக்களிப்போம்..
No comments:
Post a Comment