அறுவைக்கூடம் ஏலம் இனி அறுசுவை கூடும்.
ஆடவருக்கும் மகிழ்ச்சி
மகளிருக்கும் மகிழ்ச்சி
ஆடருக்கும் தொட்டி, நம்
அனைவருக்கும் ஆனது..
எடுத்ததும் நம் உறவே,,
எடுக்க முயன்று, இயலாமல்
போனவர்களும் நம் உறவே..
சுகாதார உணவிற்கு
உறுதி தந்த ஏலத்தில்
கட்சிகளின் மோதலில்லை..
மதங்களிடை பேதமில்லை..
இன்று எல்லாம் நன்றாகவே
நடந்தது இனியும் நன்றாகவே
நடக்கும்.ஹலாலான புலால்
சுகாதாரமாய் கிடைக்கும்...
செம்மறியோ,வெள்ளாடோ
நோயோடு தள்ளாடா
நல்லாடாய் இருக்கட்டும்
ஹலாலாய் இனி வேகட்டும்..
உணவுக்கான ஆட்டை
உணர்வுக்கான ஆடாய்
ஆக்கவேண்டாம்..ஆடுக்கு
எம்மதமும் சம்மதமே..
நடுநிலையாய் நின்ற
நகர்மன்ற தலைவருக்கும்
நகராட்சி அதிகாரிகளுக்கும்
நன்றிதனை சமர்ப்பிப்போம்
No comments:
Post a Comment