முத்துத்தீவின் 52 ம் ஆண்டு
தேசிய தினம்.. பஹ்ரைன்
என்றால் இரண்டு கடல்களின்
சங்கமம் என்று பொருளாம்..
எங்கள் உள்ளமும் உணர்வும்
சங்கமித்த நாடல்லவா...
அந் நாட்டின் நினைவுகளால்
ஊரிப்போன எம் நெஞ்சு
பொருளுக்காக தேடிப்போன
நாட்களை எண்ணி பார்க்கிறது..
தொண்ணூறு துவக்கத்தில்
சத்தாமின் 'ஸ்கட்' ஏவுகணைகள்
குட் மார்னிங் சொல்ல, தினம்
சவூதி பக்கம் வந்த போதும்..
அந்நேரம் சைரனும், வானொலி
பெட்டியும் அலறிட, ஓடோடி
அறைக்குள் அடங்கிய போதும்..
ரசாயன குண்டு நம் மீது
வீழலாம் என்ற செய்தி கேட்டு,
பீதிக் கொண்டு ஜன்னல்களை
டேப்புக்களால் ஓட்டியப்போதும்.
போர்க்கால நேரத்தில்
வீதியெங்கும் அமெரிக்கப்
படைகள் உலா வருவதை
அச்சத்தோடு பார்த்தபோதும்..
ஷியா- சன்னிக்களின்
சகோதர சண்டையில் நாடே
அதிர்ந்த நேரம்..பீரங்கிகள்
தெரு எங்கும் ஊர்ந்த நேரம்..
கலங்கவில்லை நாங்கள்..
இந்தியர்கள் விசுவாத்தில்
நம்மை முந்தியவர்கள்
என்பதை அரேபியர்கள்
உணர்ந்த தருணம் அது..
அந்நியன் என்றும் பாராமல்
அன்னியோன்யமாய்
முகரத்தின் போது முகம்
மலர உபசரிக்கும் ஷியாக்கள்..
நோன்பின் மாண்பினை
பேணி,இப்தாரின் போது
பள்ளி எங்கும் பசியாற்றும்
சேவை பணியில் முன்
நிற்கும் சன்னிகள்...
பற்பல தேசிய இனங்கள்,
பற்பல கலாச்சார சங்கமங்கள்
அதில் தமிழ் மன்றங்களின்
பங்களிப்புகள்..மறக்க
முடியாத அனுப்புவங்கள்..
உன்ன ஊண் தந்த தேசத்திற்கு
நன்றி சொல்ல,தேன் கலந்த வார்த்தைகளை தேடினேன்..
இதய கீதம் பாடினேன்...
No comments:
Post a Comment