Wednesday, 13 December 2023

திருமண வாழ்த்து மடல்!

திருமண வாழ்த்து மடல்!
இடம்:சென்னை 
நாள்:15.12.2023
---------------------------------------------------------
மதுக்கூரார் ஷகாபுதீன் 
உண்மையில் அவர் 
மதிக் கூரார் ஷகாபுதீன்..
சொல்லிலும் கூரானவர்
செயலிலும் நேரானவர்..

அயலகம் சென்றவர்,தாயகம்
வந்து,நகலகம் வைத்து,அதை 
தன் செயலகம் ஆக்கியவர்.
இவர் தொழில் நகல் எடுப்பது.
ஆனால்  பெற்றெடுத்த இரண்டும்
அசலானது...அசத்தலானது.. 

அவர் கைகோர்த்தது
கப்பக்காலர் வீட்டு அம்மாவை..
அம்மனி 'கப்பல்' காரர் என்பதால்
சென்னை வெள்ளம், நல்ல
உள்ளம் கொண்ட இவரிடம்
தனிந்தே சென்றது..
பணிந்தே சென்றது...

இந்தக் கப்பக்கார அம்மா
சிற்பக்கார அம்மா.. ஆம் 
ஈன்றெடுத்த பிள்ளைகளை
செதுக்கி சிற்பமாக்கியவங்க..
ஒரு சிற்பம் ஐக்கிய நாட்டில்
மற்றொண்டு மணவாழ்வில்
இன்று ஐக்கியமாகிறது..

மணமகன் ஷஹ்லின் உயர்ந்த 
மனிதன். எண்களால்  மட்டுமல்ல, எண்ணங்களால் உயர்ந்தவன்..
இந்த மதுக்கூரான்.மதி கூரான்
'திறன்'கூரான்.ஒருநாளும்
யார் பற்றியும் புறங்கூறான்.. 

பண்பானவன், அன்பானவன்
அழகானவன், அறிவானவன்
துணிவானவன் இன்று
ஷிஃபானா வின்  துணையானவன்.

இந்த இளையோர்கள் இமையும் 
விழியும் போல் வாழ்ந்து,
இல்லறத்தில் இமயம் போல்
உயர்ந்து,இணை பிரியாமல்
வாழ,வல்ல ரஹ்மான் அருள்
புரிவானாக!ஆமீன். ஆமீன்.!

No comments:

Post a Comment