Sunday, 26 November 2023

 


இது ஏதோ வனப்பிரதேசம்
அல்ல,நாங்கள் தினம்
செல்லும் தினப்பிரதேசம்..

மழைக்கால மாலை வேளை,
கருமேகத்தோடு ஓடி ஆடி
விளையாடி,சூரியன்
ஓய்வெடுக்க சென்ற நேரம்..

பௌர்ணமி அன்று,வெகுமதி
பெற்ற முழுமதியும் எம்மை
ஆதரவாய் அரவணைத்த நேரம்..

ரம்மியமான சூழல்,குளிர் 
காற்று சாரலோடு ஊடல்
செய்யத் தொடங்கியது..

தாய்ப் பசு ஒன்று தன்
சேயைத்தேடி குரல்
கொடுக்க, அக்கன்றும்
தாவி ஓடியது.நாங்களும் 
இல்லம் ஏகினோம்.

No comments:

Post a Comment