Monday, 30 October 2023

இதுநாள் வரை மௌனி

இதுநாள் வரை மௌனி
இன்று வெளிவந்த ஞானி
சினம் இல்லாத சித்தர்
எந்நிலையிலும் தன்னிலை
இழக்காத நவீன புத்தர்..

பொருளாசை,அபிலாஷை
மோகத்தில் இறைபிடிப்பில்
இருந்து வழுவா(த) பாவாவே..
நாணயத்தின் மீது உமக்கு
மோகமில்லை...ஆனால் 
'நா' நயம் உண்டு உம்மிடம்..

நேற்றிலிருந்து உலாவரும்
ஒலிப்பேழைகள் கேட்டேன்..
தேவையெனில் தன் சிரம் 
தாழ்ந்து 'தாள்' வரை மேவும்,
தவறினால் 'தாள்' தலை வரை 
தாவும் என்ற நண்பரிடம் வசை
பாடமாட்டேன் வாழ்த்து
பாடுவேன் என்றீரே..
அது உம் உயற்பண்பை காட்டுகிறது..

விமர்சன மூடுபனியால் உம்
இறைபணி மறையாமல்
தொடரட்டும்..வல்ல அல்லாஹ்
அருள்புரிவானாக..ஆமீன்.!

No comments:

Post a Comment