அல்லாஹ்வின் அருள்வேண்டி
ஐவேலை தொழுதிட,மனிதர்கள்
செல்லும் புனிதமிகு பள்ளி..
தசாப்தங்களுக்கு முன், அதை
அறத்தோடு நிர்வகித்த
புனிதர்கள்..இன்று அதை கையிலெடுத்த இளைஞர்கள்..
இறையில்ல அலுவலகத்தில்
கருத்து மோதல் இருக்கலாம்.
அவசியமென மூளையது
ஏவினால்,விவாதிக்க
நாவினால் பேசலாம்.
ஆக்ரோஷமாய் மோதலாமா??
காழ்ப்பால் கை நீட்டும் அவலம்..
புனித இடம் மாசடைந்தது.இக்
கேவலத்தால் தூசடைந்தது..
நீதிகேட்டு ஊரார் வரும்
இடத்தில்,இத்தகு வன்முறை
சேதி கேட்டு மனம் வாடுகின்றது..
மாஸ் ஆனவர்கள் பாஸ்
ஆனவர்கள் இருக்குமிடத்தில்
வயசானவருக்கு இடமில்லையோ..
உண்மை தான் என்ன?..ஊரறிய
அதை சொன்னால் தான் என்ன?
ஒட்டுப் போட்டவர் கேட்கின்றனர்..
நமதூரார் உங்கள் மேல் வைத்த
நம்பிக்கை பொய்க்காமல்
மெய்ப்பிக்க முற்படுங்கள்..
அல்லாஹ்வின் அருள்,அவன் இல்லத்தை நிர்வகிப்பவர்கள்
மீது பொழியட்டும்..அவர்களின்
முரண்கள் மறையட்டும்..
தன்முனைப்பை விட, ஊர்
நலனே பெரிதென்பதை
அவர்கள் உணரட்டும்.
Tuesday, 24 October 2023
அல்லாஹ்வின் அருள்வேண்டி ஐவேலை தொழுதிட,மனிதர்கள் செல்லும் புனிதமிகு பள்ளி..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment