Sunday, 1 October 2023

மேயரை வான்மழை வாழ்த்துகிறதோ...

மேயரை வான்மழை
வாழ்த்துகிறதோ...
பூ மழை பொன்மகளை
பூத்தூவி போற்றுகிறதோ..

இதுநாள் வரை ஒத்திசைவாய் ஒத்துழைத்த என்கண்கள்,
இக்காணொளி கண்டபின்
பார்வைகள் பலவிதமாம் எனச்
சொல்லி முரண்பட்டன இன்று..

தூரலே நின்றுவிடாதே
என்று காமனின் சொல்கேட்டு
என் கண்ணொன்று கூவுகிறது..

காண்போரின் கண்கள்
மேயரை மேய்கிறதே என்று
மற்றொரு கண் கலங்குகிறது...

அறிவிடம் ஆலோசனை 
கேட்டேன் .அதுவோ காமனின் 
கண்ணைக் குற்றப்படுத்தி,
ஹார்மோனே காரணம் என்றது 

முரண்பட்ட கண்களை பற்றி
இதயத்திடம் முறையிட்டேன்
முறையற்ற செயல் என்றது..

இரண்டு கண்ணும் உனது
தானே..இரண்டு மனம்
உள்ளதால் வந்த குழப்பமது..
திருந்தவேண்டியது நீ தான்
கண்கள் அல்ல என்றது இதயம்..

அறிவும்  இதயத்தின் அருகில்
இறங்கி வந்து ,இதயம்  
சொல்லை தட்டாதே என்றது...

சஞ்சலப்பட்ட மனம் 
காந்தி ஜெயந்தி அன்று
நிதானம் கொண்டது
சமாதானம் அடைந்தது...

ஆக்கம்
மனசாட்சி....

No comments:

Post a Comment