இன்றோடு, நீ மண்ணுலகை
விட்டு பிரிந்து, பதினோரு
ஆண்டுகள் ஓடிவிட்டது..
ஆனால் கூடி மகிழ்ந்த நாட்கள்
மனதில் இருந்து ஓடவில்லை..
மலரும் நினைவுகள் வாடவில்லை..
நீ இருக்கும் இடத்தில் சிரிப்பும் சிந்தனையும்
இருக்கும்.மனம்
இருக்கும்.மனம்
கவலைகளை மறக்கும்..
பந்தாய் சுழலும் உன்னை
அன்பாய் 'பந்தா' என்போம்.
எம்மேல் கோபமில்லை உனக்கு..
சிரித்துக்கொள்வாய்..
அச்சிரிப்பால் எம் இதயத்தை
கொள்ளை கொள்வாய்..
நீ அடங்கிய கொல்லைக்கு
நாங்கள் தினம் வரவில்லை..
மன்னித்துவிடு. ஆனால்
மனம் உனை விடவில்லை...
நண்பா.! நீ இருக்குமிடத்தில்
நன்றாய் இருப்பாய் என்ற
நம்பிக்கை எமக்குண்டு..
No comments:
Post a Comment