Monday, 4 September 2023

இவர்கள் கிழமோ பழுத்த பழமோ இல்லை.




 இவர்கள் கிழமோ பழுத்த 
பழமோ இல்லை..முதிர்ச்சி
தெரிகிறது ..ஆனால்
அது அனுபவ முதிர்ச்சி..

உருண்டு திரண்ட உருவம்
வாலிபம் கடந்த பருவம்...
அவ்வளவே..இவர்கள் மனதில்
முதுமை என்பது எள்ளளவே..

பேத்தியை கண்ட கர்வமும்
பேரனை காண ஆர்வமும் 
கொண்ட அப்பாக்கள்..

அதிகாலை துயில் எழுந்து
நடை பயின்று எடை குறைக்க
முயலுங்கள்..வரப்போகும்
கொள்ளு பேரன் பேத்திகளோடு
அளவளாவி மகிழுங்கள்

No comments:

Post a Comment