பகல் பொழுதெல்லாம்
தகிக்கும் சூரியனின்
உக்கிரப் பார்வை..குற்றால
அருவியாய் வியர்வை..
மாலைப் பொழுதினில்
ஆசுவாசம் தேடிய என்னுடல்
கடற் காற்றை கேட்டது..
அதன் மனகிடக்கையை
நிறைவேற்ற, கடற்கரை
மணல் மீது, துணையின்றி
தனியாய் நான் நடந்தேன்..
விண்ணில் வெண்ணிலா
தனிமையில் ஒளிர,கடல்
மண்ணில் நானும் என்
தனிமையை உணர,கைக்
கோர்க்க வருவாயா? என
பால்நிலவைக் கேட்டேன்..
ஒளிவுமறைவின்றி, ஒளிர்
நிலாவும் என்னருகில்
குளிர் நிலாவாய் வந்தது
அதனோடு கடலோரம்
என் உலாவும் துவங்கியது..
எரிக்கும் சூரியனிடம் இருந்து
எமை காக்க கை விரிக்கும்
சந்திரனோடும்,கடலோர
காற்றோடும் நன்றி கூறி
தற்காலிமாய் விடைபெற்றேன்
ஆம்.மீண்டும் அவர்களை
சந்திக்கவேண்டும் அல்லவா..
No comments:
Post a Comment