விடிகாலையில் பனித்துளியின்
சில்லென்ற திவளை ஒன்று,
சட்டென்று முகத்தில் முத்தமிட்டால்
மனதில் எழும் உணர்வைப் போல..
திடீர் கோடை மழையின் குளிர்
காற்றும்,அது தரும் மண்ணின்
வாசனையும்,நம்மை சொக்கிடச்
செய்யும் சுகானுபவம் போல...
பத்துமாதம் சுமந்தவள்,பெற்ற
பிள்ளையின் அழுகுரல் கேட்ட
போது,மகிழ்ந்து உதிர்த்திடும்
ஆனந்தக் கண்ணீரை போல...
தத்தி நடந்து,வாணி வழிய
நம்மை கட்டி அணைக்கும்,
குட்டிக் குழந்தையின் மழலை
மொழி தரும் சுகத்தைப் போல...
நீண்ட திட்டமிடலுக்கு பின்,
குடும்பத்தோடு கூடிய அழகிய
கோடை வாசஸ்தல பயணம்
தரும் இன்பத்தைப் போல..
அத்தனை உணர்வுகளும் பெற்று
பரவசம் கொண்டேன்,உங்களின்
அன்பான வாழ்த்துக்களால்..
என் பிறந்தநாளன்று வாழ்த்திய
என் ஆருயிர் உறவுகள்,நட்புக்கள்
அனைவருக்கும், என் நெஞ்சார்ந்த
நன்றிதனை சமர்ப்பிக்கிறேன்..
No comments:
Post a Comment