வயோதிகம் உறவுகளை
வீழ்த்தும் போது,மனம்
வருந்திடும்..காலம் அந்த
சோகத்திற்கு மருந்திடும்...
இழப்பு என்பது, இயற்கையின்
நியதிதானே என்று,அறிவு
அறிவுறுத்தும் போது, நம்
மனமும் கொஞ்சம் தெளியும்..
எவரையும் வியூகம் அமைத்து
வீழ்த்தும் வயோதிகமே..நீ
இவரையுமா வீழ்த்தவேண்டும்..
ரத்தன் டாட்டா எங்கள்
தேசத்தின் ரத்தினம்..இவர்
செய்த ஈகைக்காக,கொஞ்சம்
பொறுமை காத்து,வாழும்
நாட்களை நீட்டித்து கொடுத்திடு
No comments:
Post a Comment