தேர்தல் ஜுரத்தால் சூடேறி
பித்தம் முற்றி,சத்தம் மிகு
வார்த்தைகளை கொட்டும்
ஆள்களும்,காண்போரை
எல்லாம் கொட்டும் தேள்களும்
ஒரே குணம் கொண்ட உயிர்களே..
இடித்துரைத்து,பழித்துரைத்து
சகோதர பாசத்தை இழக்காமல்,
நாமெல்லாம் தொப்புள் கொடி
உறவு என்பதை மறக்காமல்,பள்ளி
தேர்தலில் களம் காண இயலாதா?
ஊழலில் திளைத்தனர்,பள்ளிச்
சொத்தை முடித்தனர் என்ற
குற்றச்சாட்டு ஒருபுறம்.,அதை
இல்லை என்று நிரூபிக்க
மீண்டும் தேர்தல் களம் காண
வரும் நிர்வாகிகள் ஒருபுறம்..
வாய்திறக்கவில்லை என்று
குற்றம் கண்டவர்கள், இன்று
அவர்கள் வாய் திறந்தால்,அதை
தேர்தலுக்கான யுக்தி என்று
சக்தியை திரட்டி பேசுகின்றனர்..
இழந்ததாக சொன்னதை,இல்லை
என்கிற அவர்களின் வாதம்
கேட்போம். உண்மை இருப்பின்
அவர்களுக்கு வாக்களிப்போம்..
நிர்வாகத்தில் சில சருக்கல்கள்
இருக்கலாம்,அதை அவர்கள்
மறுக்கவும் இல்லை..உடல்
பொருள் ஆவியெல்லாம் தந்து
அவர்கள் உழைத்ததையும்
ஊரார் மறக்கவும் இல்லை..
இம்மாதம் முப்பத்தி ஒன்றாம்
தேதி மாலை,வெற்றி மாலை
சூடப்போவது யார்.?
அம்மாலை ஒரே வகை பூக்களால்
ஆனதா? பலவகைகள் சேர்ந்த
கதம்பமாலையா? எதுவானாலும்
ஊரெங்கும் நல்ல மணம் பரப்பும்
மாலையாக அமையட்டும்
No comments:
Post a Comment