கூத்தாநல்லூர் பெரியபள்ளிக்கு
நல்முத்துக்கள் பதினைந்தை
திகதி முப்பத்தி ஒன்று அன்று
தேர்ந்தெடுக்க விழைவோரே.!
முன்னணியா? பின்னணியா?
என்னணியா?உன்னணியா?
என்று,வரும் வாரமெல்லாம்,
காரமான வசவுகளே,உங்கள்
செவிப்பறையை கிழித்திடும்..
கங்காரு கோர்ட்டாய் சில
வாட்ஸ் அப் தளங்கள்..அதில்
மேதாவிகள் சிலரின், நிதர்சனம்
புரியாத,அதீத விமர்சனங்கள்
சரவெடியாய் சலனம் தரலாம்..
பெரும் பள்ளியை,சுன்னத்தை
பேணாத வெறும் பள்ளியென்று
தனிப்பள்ளி கண்டோரெல்லாம்
இன்று அப்பள்ளி மீது காதல்
கொண்டு வசனமும் பேசலாம்..
வாக்களிப்போரே.!வாக்கப்படும்
மணமகளைப்போல வெக்கிடாமல்
வெறும் வார்த்தை ஜாலங்களில்
சொக்கிடாமல்,ஊர் பாரம்பரியம்
காக்க, சிந்தித்து வாக்களிப்பீர்..
பொது பணத்தை திருடியவனே
ஓடி ஒளிவான், மடி மீது கணம்
இல்லாதவனே,மக்கள் மன்றத்தை
நாடி வருவான்.உண்மையைச்
சொல்லி,பொய்மையை தகர்க்க
தன் உயிரையும் தருவான்..
சுமத்தப்படும் குற்றச்சாட்டில்
உண்மை இல்லையென இந்த
ஊரறிய,நிலமறிய,எடுத்துச்
சொல்லிட வாய்ப்பைக் கேட்பான்..
பழையதோடு புதியது நான்கோ
ஐந்தோ சேரட்டும்,ஐயங்கள்
தெளிய,நிர்வாக குழுவில்
கேள்விகள் கேட்கட்டும்..
பதினைந்தாய் இணையும்
அக்கூட்டணியால்,நமதூர்
பதினாறும் பெற்று ,சீரோடு
பெருவாழ்வு வாழட்டும்...
No comments:
Post a Comment