ஊருக்கு உழைத்த பிள்ளை,
நல்ல பிள்ளை,சட்டென்று தன்
வண்ணத்தை மாற்றி,சுய உருவை
காட்டி,புலம்ப தொடங்கிவிட்டது..
புரியாமையின் மொழி என்பது
புலம்பல் அன்றி வேறில்லை..
புலம்பல் என்பது,பலவீனத்தின்
அடையாளமன்றி வேறில்லை..
ரத்தம் உறிஞ்சும் அட்டைகள்,
இருக்கும் இடத்தில்,ஈரப்பதம்
இல்லையெனில்,அவ்விடம்
தவிர்த்து,வேறு இடம் ஓடிடுமாம்..
நம் தம்பி அட்டை இல்லை,நான்
அறிவேன்..நல்ல பிள்ளை தான்..
பதவி ஆசை,தம்பியை ஏனோ
பரிதவிக்க வைத்துவிட்டது..
இளமையில் யாரென்று,ஊர்
அறியாத நிலையில்,அடையாளம்
தந்தவர்களை,பதவிக்கு வேண்டி
எட்டி உதைப்பது வன்முறையா?
இல்லை அது நன்முறையா?
வளர்த்த கிளியொன்று,வானில்
பறந்து,எச்சத்தை காத்தவர்
தலையில் இடுவதும்,வளர்த்த
கடா மார்பில் பாய்வதும்,இன்று
இயல்பாய் ஆகிப்போனதோ?
குற்றம் கண்டால்,அவர்களும் உம்
சுற்றம் தானே,அன்றே சொல்லி
குறையினை களைய முற்படாமல்
மௌனம் காத்து,தேர்தல் நேரத்தில்
மௌனம் களைவது,பச்சையான
பெரும் சந்தர்ப்பவாதம் தானே.
மண் வளம் அறிந்த,விவசாயம்
படித்த,பெரிய பள்ளி நிர்வாக
தலைவர்,தம்பியின் மனவளம்
அறிய,குணநலம் புரிய தவறி
விட்டார்.இன்று புரிந்துகொண்டார்..
உங்கள் முகம் ஊரார் அறிய,அன்று
அறிமுகம் செய்த,அமீரக குழுமம்
உம்மை கைவிட்டதா? இல்லை
உம் செயலால் கைசேத பட்டதா?
வண்ணங்களை,எண்ணங்களை
நேரத்திற்கு ஏற்ப மாற்றும்,சில
மனிதர்களை, ஊரார் அடையாளம்
கண்டு,பாடம் புகட்டும் நேரமிது..
No comments:
Post a Comment