Wednesday, 13 July 2022

வேலையாட்கள் நியமனம்..

வேலையாட்கள் நியமனம்..||
கூத்தாநல்லூர் ஜமாத்தார்களின்
மேலான கவனத்திற்கு..
~~~~~~~~

முன்னோர்கள் கட்டித் தந்த
பூதாகர கட்டிடத்தில்,அறப்பணி
செய்ய வந்தோர்,பணிக்காலம்
முடிந்து வீட்டுக்கு செல்கின்றனர்..

கட்டிடத்தில் சில கறைகள்
ஆங்காங்கே இருப்பதேன் என்ற
ஊராரின் கேள்விக்கு,வண்ணச்
சாந்து பூசிட,அதில் சாரம் கட்டி
ஏறியதால் அக்கறை என்றனர்..

அக்கரையாய் அக்கறையை
நீக்கிட, ஊரறிய முயன்ற தம்
கதையையும் நவின்றனர்..

கட்டிடம் புதுப்பிக்க முயன்றதில்
சோரம் போனதாய் குற்றம்சொல்வோர்
கூற்றில் உண்மை இல்லையென ஆதாரம் காட்டினர்..

வக்ஃபு வாரிய துணையோடு
சட்டபோராட்டம்,திட்டமிட்டபடி
தொடரும்,அதில் எந்த இடரும்
இல்லையென்றும் கூறினர்..

மன்னையில், தஞ்சையில்
உள்ளதை கைப்பற்ற களமாடி
இரவு பகல் பாராது நடமாடி
முயன்ற கதையை,முற்றிலும்
மறைக்காது உரைத்தனர்..

ஊரார் தந்த பணம் எங்கே?
சொத்தில் வந்த பணம் எங்கே?
என்றபோது,கோடிக்கு அருகில்
வங்கியில் உள்ளதென்ற
உண்மையை உரக்க சொல்லினர்..

மிட்டாய்க்கடை வைத்தவர்
பெரும் கொட்டகை போட்ட
கதை கேட்டபோது அதை
மூன்றிலிருந்து முப்பதாக்கி
விரிவாக்கினோம் என்றனர்..

உள்ளதை இழக்கவில்லை
என்று சத்தியம் செய்யும் நீவீர்
உள்ளதை பெறுக்கியதுண்டா?
உள்ளபடி சொல்லும் என்ற நம்
கேள்விக்கு  சில காலணிகள்
கட்டியதை சுட்டிக் காட்டினர்..

ஆண்டறிக்கை தந்தால் நீர்
ஆண்ட கதை தெரியுமே
என்ற போது,அச்சகத்தில்
உண்டு,நிச்சயம் வெளிவரும்
அச்சமில்லை எமக்கு என்றனர்..

விட்டதை மீட்டிட,தொட்டதை
முடித்திட,அப்பணியாளர்கள்
மீண்டும் வேலைக் கேட்டு
விண்ணப்பித்தால், நம்
எஜமான வாக்காளர்கள்
அவர்களின் நியாயமறிந்த
வாய்ப்பினை தருவார்களா.?

சாதக காற்று யார் பக்கம் வீசும்..
ஊராருக்கு  பாதக காற்றாய்
மாறிடாமல்  காத்திட வல்ல
ரஹ்மான் அருள்புரிவானாக..

No comments:

Post a Comment