எந்த சலசலப்புக்கும் அஞ்சாத
சில பனங்காட்டு நரிகள் உண்டு..
எமக்கு பிடித்ததெல்லாம், அந்
நரிகளின் துணிந்த நெறிகளே..
நான் வியந்து நோக்கிடும் ஒரு
பனங்காட்டு நரி உண்டெனில்
அது ஜமால் ஷேக்கே..உன்னை நிந்தித்தவர் பலருண்டு,
என்றாலும் நீ தேர்தலை சந்தித்திட வேண்டும்.
மடியில் கனமில்லையெனில்
வழியில் கவலை ஏன்?சயனம்
தவிர்த்து விழிமின்,எழுமின்,
பயணம் தொடர உழைமின்..
மக்கள் சக்தியில் நம்பிக்கை
இருக்குமெனில்,விரக்தி இன்றி
வில்லென பாய்ந்திடு, வில்லன்
இல்லை என்று நயம்பட விளம்பிடு..
நிர்வாக சருக்கல்கள்..,அதில்
ஊழல் இல்லையெனில், அதை
ஊரறிய இயம்பிடு,உன் மேல்
எழுந்த பழியை துடைத்திடு..
செயல்பாட்டில் வெளிப்படைத்
தன்மையும்,அதிகார பரவலும்
இருப்பின், நிர்வாகம் சீர்படும்..
இல்லையெனில் சிரமப்படும்..
நடந்தது அதுவாக இருக்கலாம்
பணிச்சுமை உனக்கு வெகுவாக
இருக்கலாம்..குறையை கலைந்து
ஊரை செப்பனிட நீ வரவேண்டும்..
பொது வாழ்வில் விமர்சனம்
வரும்,அது மனச்சோர்வை
தரும். தடித்த தோல் உமக்கு
இல்லையெனில்,கடித்திடும்
கொசுக்களே வெற்றி பெறும்..
ஜமாத் தேர்தலுக்கு ஆதரவைதிரட்டும்
அன்பர்களே..பொய்யும்
புரட்டும் இல்லா நல்லவர்கள்
வரட்டும்,வல்லவர்கள் வரட்டும்..
ஆவன செய்திட முயலுங்கள்..
கருத்து சுதந்திரத்தை காயப்
படுத்தாமல்,கருத்து பரிமாற்றம்
இருக்கட்டும். களம்காணும் வேட்பாளர்கள்
கருத்தோடு செயல்பட வேண்டுகிறேன்....
No comments:
Post a Comment