Wednesday, 20 July 2022

நேற்று காமராஜரின் பிறந்த நாள்(ஜூலை 15.)

நேற்று காமராஜரின் பிறந்த
நாள்(ஜூலை 15.) கர்மவீரரின்
கதையை நம் பள்ளியின் நிர்வாகிகளுக்கு
நினைவூட்டவே
இப்பதிவு...குறை இருப்பின்
மன்னிக்கவும்...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பசிப்பிணியால் பள்ளிக்கு
வர இயலா பிள்ளைகளை
ஊக்கமளித்து,உணவளித்து
பள்ளிக்கு வரவழைத்தவர்..

கல்வித்தந்தை என்ற பெயர்
பொருத்தம்,எளிமையின்
இலக்கணமான இவரன்றி
வேறு யாருக்கு பொருந்தும்?

பொற்கால ஆட்சியை,தற்கால
ஆட்சியருக்கு நினைவூட்ட,
இவர் பெயர் அன்றி, வேறு
மந்திரச்சொல் ஏதுமுண்டோ?

சமூகத்தில் கல்வியும்,உழைப்பும்
உண்டெனில்,அங்கு வன்முறைக்கு
இடமில்லை என்ற நன்முறையை
சொன்னவரும் கர்ம வீரர்தானே..

நாடறிந்தவர்,நாலும் தெரிந்தவர்
எண்ணங்களால் உயர்ந்தவர்..
தேர்தலில் ஊரறியா மாணவரிடம்
தோல்வியுற்ற பெருந்தலைவர்..

விமர்சனத்திற்கு பதில் சொல்லி,
தன்னை முன்னிலை படுத்த
முயலாத காரணத்தால்,அந்திம
காலத்தில்,அரசியலில் வெற்றி
பெற இயலாத தலைவர்..

இதில் படிப்பினையுண்டு.
செய்த செயலை,திறம்பட சொல்ல
இயலா தலைமை,மண்ணை
கவ்வி,தோல்வியுற வாய்ப்புண்டு..

பெரியபள்ளி நிர்வாக தேர்தலில்
நிற்க முனையும் முன்னாள்
நிர்வாகிகளை,கிள்ளி பார்க்க
கர்ம வீரரை அழைத்தேன்..

உம்மை குற்றப்படுத்தி வாட்ஸ்
ஆப் குழுமங்கள் வசைப்பாடி
வாக்கெடுப்பு நடத்திட,நீவிர்
வாய்மூடி மௌனம் காப்பதேன்..

நிர்வாகிகளே.!நிரூபிக்க ஆவணம்
உண்டு என்றால்,ஸ்தாபனம்
நிலைக்க,வெளிப்படையாய்
ஆணவமின்றி பேசிடுங்கள்..

உம் கோவணம் காத்திடவும்
பூவனமாம் நமதூரின் பாரம்பரிய
பெருமை காத்திடவும் உள்ளதை
ஊரறிய உரக்கச் சொல்லுங்கள்..

படுத்து கொண்டே ஜெயிப்பேன்
என்றுரைத்த காமராஜர் நம்பியது
அவர் செய்த நற்செயலை.அது
அவருக்கு கைகொடுக்கவில்லை..

செயல்பாடுகளை சில சமயம்
வாய் பா(ட்)டுக்கள் வென்றிடும்
நல்ல பாஷைகளை பலமான
ஓசைகள் சில சமயம் மிஞ்சிடும்..

கர்மவீரரே அதற்கு சான்று.இதில்
படிப்பினை உண்டு உமக்கு...

No comments:

Post a Comment