Sunday, 5 June 2022

மரைக்காயர்,காணப்படி குடும்பத்தின் புது வரவை புது உறவை வரவேற்கிறேன்.

உளிதாங்கும் கற்கள்
வலிதாங்கி,கண்கவரும்
சிற்பமாவதும்,கற்பமாகும்
பெண்கள்,வலிதாங்கி
உயிர்காக்கும் தாயாவதும்
பொறுமையால் தான்..

பொறுமைக் காத்து,வலியை
ஏற்று,சிற்பமாய், அழகிய பெண்
பிள்ளையை,தேவதையாய்
தந்த,அன்பிற்குரிய மருமகள்
ஸஹ்னாஸே,உனக்கும்
தம்பி பரக்கத் அலிக்கும்
இதயம் கனிந்த வாழ்த்துகள்...

மரைக்காயர்,காணப்படி
குடும்பத்தின் புது வரவை,
எங்களின் புத்தம் புது உறவை
வாழ்த்தி வரவேற்கின்றேன்...

எங்களின் அன்பு மழையில்
நனைய, வாமகளே வா..
பூமகளே வா..பால்நிலவே வா..
வண்ண ரோஜாவே வா..உன் புன்னகையால் ,
எங்கள் வாழ்வில் விளக்கேற்ற
வாமகளே வா..பூ மகளே வா....

பொன்மகளை தந்த,உன் புகழ்
பாடி,சிரம் தாழ்த்தி,உனை
போற்றி, வணங்குகிறேன்
யா அல்லாஹ்..யா அல்லாஹ்..

No comments:

Post a Comment