Friday, 3 June 2022

இளம் தம்பதிகள்,காதர்மீரான் அஸ்ஃபர் ஜீஸான் மற்றும் லெப்பாச்சி தஹ்மீனா தஹ்ஸீனுக்கு வாழ்த்துகள்..! (திருமணநாள் 04.06.2022)


அன்பைத் தன் உயிராய்க்
கொண்ட அஸ்ஃபர்,பண்பை
உயிராய்க் கொண்ட செல்வி
தஹ்மீனாவாய்,தன் உயிருக்கு
நிகராய்  ஏற்று, கைகோர்க்கும்
நன்னாள்,பொன்னாள் இன்று..

வல்லவனாய் வாழ்வது எளிது..
நல்லவனாய் வாழ்வது கடிது..
வல்லவனாய் வாகை சூடி,
நல்லவனாய் வாழும் தம்பி
அஸ்ஃபரின் மணவாழ்க்கை
சிறக்க வாழ்த்துகிறேன்..

இறைமறை படித்து,தீன் கல்வி
கற்று,நிறை குறை அறிந்த
மணவாட்டி;எதார்த்தம் புரிந்த,
வாழ்வியல் அறிந்த மணவாளன்,
அற்புத கலவை..வாழ்த்துவோம்,
போற்றுவோம் இப்புனித உறவை..

அன்பால் நிறைந்து,கனிவால்
சிறந்து,காதலில் உயர்ந்து,
பாசத்தில் பிணைந்து,பார்
போற்ற நீவிர் வாழனும்..
வாரிசுகள் உம்மை சூழனும்..
மனதார வாழ்த்துகிறேன்..
வல்லவனிடம் வேண்டுகிறேன்..

No comments:

Post a Comment