அறிவுத் தேடலுக்கான
அகமாய்,அற்புத இடமாய்
அல் பத்ராவை உருவாக்கிய
ஆருயிர் அண்ணன்
சாலப்பை தாவூத்
அவர்களை,நன்றியோடு
நினைவு கூறுகிறேன்...
புத்தகங்கள் என்று வெறும்
பக்கங்களை விற்கவில்லை..
வாழ்வின் விருப்பங்களை
நிறைவேற்றும்,நல்ல
திருப்பங்களை தரும்,
அற்புதங்களை விற்றோம்..
சகாப்தமாய் ஓரிடத்தில்
இரண்டு தசாப்தங்கள்..
உருண்டோடி விட்டது..
விரைந்தோடி விட்டது..
செயல்பட்ட இடத்தில்
அறிவகம் அல் பத்ரா
முடிவுக்கு வந்தாலும்
விடிவுக்கு வழியுண்டு...
நிர்பந்தங்கள் காரணம்
நிலைமாறிப் போனாலும்,
தடுமாறிடாமல், புது இடம்
நோக்கி பயணிக்கிறோம்..
படைத்தவனின் அருள்மாரி
காத்திடும்..நம்புகிறோம்.
No comments:
Post a Comment