Monday, 23 May 2022

அம்மாக்கள் என்றாலே அற்புதம் தானே.!!

ஈன்றெடுத்த பிள்ளைகள் பலர்
தாய்க்கு திறனோடு துணை
இருப்பர்..மாற்றுத்திறனோடும்
துணை இருப்பர்...பெற்றதில்
நற்கதிரும் உண்டு,பயனில்லா
பதரும் உண்டு.அம்மாக்களோ
பாசத்தில் குறை வைப்பதில்லை..
அம்மா என்றாலே அற்புதம் தானே..

கேட்க இயலா பிள்ளை,பார்க்க
இயலா பிள்ளை,வாயில்லா
பிள்ளை, வகையில்லா பிள்ளை
நடையில்லா பிள்ளை,ஆனாலும்
இவர்களை தொல்லை என்று
எண்ணுவதில்லை அம்மாக்கள்..
அம்மா என்றாலே அற்புதம் தானே..

தவறான சகவாசம்,அதனால்
சிறைவாசம்.. ஆனாலும் தன்
பிள்ளைமேல் வைத்த விசுவாசம்
குறையாத அம்மாக்கள் உண்டு..
அம்மா என்றாலே அற்புதம் தானே..

சட்டமன்றம்,பாராளுமன்றம்
நீதிமன்றம் அத்துணை
மன்றங்களும் ஏறி இறங்கிய
முப்பதாண்டு சட்டப் போராட்டம்..
முடிவுக்கு வந்தது ஒரு தாயால்..
அம்மா என்றாலே அற்புதம் தானே..

எத்தனை இடர்கள் வந்தன..
எத்தனை துயரை தந்தன.
அத்தனையும் வென்றெடுத்த
அற்புதம் அம்மாளின் தொடர்
போராட்டம்..விளைவு..
பேரறிவாளன் விடுதலை..
அம்மா என்றாலே அற்புதம் தானே..

No comments:

Post a Comment