AVM அவர்கள்- ஏவி, எம்மை
படிக்கத் தூண்டியவர்,இவரால்
ஜமாலில் இடம் பிடித்தவர்கள்
பலருண்டு.. அவர்களின்
நெஞ்சில் என்றுமே இவருண்டு..
இவர் பெயர் கேட்டால்,ஜமால்
கல்லூரி, மாணவர்களுக்கு
கேள்விக்கணையின்றி கதவைத்
திறந்திடும்,அம்மாணவர்களின்
அறிவுக் கண்ணையும் திறந்திடும்..
இஸ்லாமிய இலக்கியவாதிகள்
இளைப்பாறும் தரு இவர்.அவர்தம் படைப்புக்கள் சிலவற்றின்
கரு இவர்..இவர் கொடையால்
கடை விரித்த இஸ்லாமிய
படைப்பாளிகளின் குரு இவர்..
குரலற்றவர்களுக்கு குரலாய்,
பொருளற்றவர்களுக்கு
பொருளாய், சமூக புரவலராய்,
புலவராய் பன்முகம் கொண்ட
பொன் முகம் கொண்டவரின்
நினைவு நாள் இன்று..
அறத்தான் வருவதே இன்பம்
அதினும், தமிழுக்குத் தருவதே
தலைமை இன்பம் என்ற
கொள்கை கொண்ட, வள்ளல்
தமிழ்த் தொண்டர் ஜஹபர்தீன்
அவர்களின் நினைவேந்தல்
நிகழ்வு,வெற்றிகரமாக
நடந்தேற வாழ்த்துகிறேன்..
No comments:
Post a Comment