காலண்டருக்கு என்னானது.?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஊர்வந்த போது,என் வீட்டு
நாட்காட்டியிடம்,கொஞ்சம்
நிதானித்து செல்லென்றேன்..
என் பேச்சையும் கேட்காமல்
ஏறெடுத்தும் பார்க்காமல்
காலத்தை சிரத்தையாய்
கடத்தி,ஏழு பக்கங்களை
உதிர்த்து கடமையை செய்தது..
வாரம் முடிந்தது,சுவற்றில்
அடித்த பந்தாய், மீண்டும்
பஹ்ரைன் திரும்பும் நிலை...
முதல் தேதியன்று,சம்பள
நாளை நினைவூட்டும் போது
காலண்டர் என் உறவானது
இன்றோ எனக்கு எதிரானது..
காலண்டருக்கு என்னானது
என்ற சிந்தனையோடு,
சென்னையை நோக்கி இன்று
பயணிக்க தயாராகிறேன்..
சென்னையில் நான்குநாள்..
மே பதினாறு புலரும்போது
முத்து தீவு என்னை தழுவிடும்..
கண்டேன் உறவுகளை
உண்டேன் வயிறார..வாரம்
ஒன்று போதவில்லை,ஏனோ
என் மனதும் ஆரவில்லை..
No comments:
Post a Comment