Thursday, 3 March 2022

நெருப்பில் பூத்த மலரே..


நெருப்பில் பூத்த மலரே..
உன் வெற்றி எளிதானதல்ல
மிக வலிதானது, அரிதானது..

தெருப்பாட்டில் வசைப்
பாடியோரையும்,வசப்படுத்தி..
நெருப்பாற்றில் நீந்தி,
நீ பெற்ற வெற்றி அது..

வேட்பாளர் தேர்வில்,உன்னை
இல்லையென்றார்கள்..
நீயோ, எல்லையை கடந்து
வென்று காட்டினாய்..

நீ தேடாத தலைமை பதவி
உன்னை தேடிவந்தது,மீண்டும்
நீ இல்லையென்றார்கள்,மனம்
கலங்கியதோ நாங்கள்..

கலங்காத நீயோ,நெருப்பாற்றில்
மீண்டும் குதித்தாய்,வெற்றிக்
கனியை மீண்டும் பறித்தாய்..
உன் அரசியல் பயணத்தில், இனி 

நீ தொடப்போகும் சிகரங்கள் பல..
நகரத் தலைவிதியை மாற்றப்
போகும் நகரத்தலைவியே.!
நம் நகர் சிறக்க,உன் பணி
சிறக்க, மனதார வாழ்த்துகிறேன்..

No comments:

Post a Comment