கால்பந்தை போல
காலமும் உருண்டோடியது..
மைதானத்தின் மத்தியில்
வீரர்களாக வலம் வந்தவர்கள்
ரசிகர்களாய் மைதான ஓரத்தில்..
தூரத்தில் வீரர்கள் ஓடி
ஆடுவதை,கால்பந்தை
உதைப்பதை கண்டு
பதைப்பதை,தன் குரலால்
வெளிக்காட்டும் கப்புக்காலர்
ரஷீது இடத்தில் இப்ராஹிம்
இவரை கால்பந்தின் Harsha
Bogle என்று சொல்லலாம்..
ஒருபக்கம் ஜமால்,மறுபக்கம்
கமால் எனும் சாமுராய்கள்,
அந்த மாம்ராய்களுக்கு மத்தியில்
மின்னலாய் பாய்ந்து ஆடும்
Legend அய்யா வீட்டு தாஜுதீன்..
கார்மீரா ஷர்பு,அணியின்
மதில் சுவர்..எதிர் அணியினர்
கடக்க இயலா வேகத்தடை
Defense அதன் definition இவர்..
ஆட்டமும் நன்றாக ஆடுவார்,
ஆடுபவர்களை ஆட்டியும்
வைப்பார்..விளையாட்டை
நிர்வகிக்கும் நிர்வாகி..
விளையாட்டு திறனை
காட்டி தான் இந்த KT இடம்
வீரர்கள் beta வாங்கமுடியும்..
நான்கு வல்லுநர்களை
ஒருசேர கண்டேன்,மன
மகிழ்ச்சி கொண்டேன்..
No comments:
Post a Comment