புயல் பூகம்பங்களில்
சிக்கிய நீ,என்ன ஆனாயோ
என்று,நோக்கியவர் கண்ணில்,
இன்று எல்லாம் ஆனாய்..
ஆணாய் பெண்ணாய்
பாகுபாடு பார்ப்போர்,
அண்ணாந்து பார்த்திட,
வானில் உயர்ந்து,ஒளிரும்
விண்மீனாய் ஆனாய்..
தேனாய் இனிக்கும் பேச்சால்
கவரும் கரும்புப் பெண்ணே.!
கடமை கண்ணியம் காக்கும்
இரும்புப் பெண்ணே.!
சிரமத்தை நீ சிரிப்புடன்
கடப்பதை கண்டவன் நான்...
சிறப்புடன் தலைமை ஏற்றவளே,
அறத்துடன் நன்மை செய்திடுக..
உன் நல்ல எண்ணங்கள்
எல்லைத் தாண்டி வெல்லட்டும்..
உன் சேவை கண்டு,ஊரே
உன்னை போற்றிப் புகழட்டும்..
நகரத்தலைவியே.! தொன்மை
மிக்க,நம் நகருக்கு,நன்மைகள்
பல செய்து,மக்கள் நெஞ்சில்
என்றும் நீ நிலைத்திட
பிறந்த இந்த நன்னாளில்
உளமார வாழ்த்துகிறேன்..
புதுமை பெண்ணே..!
புதுமைகள் பல செய்து,ஊருக்கு பெருமைகள் பல சேர்த்திட,
நலமோடு நீ வாழ வேண்டும்..
இறைவனிடம் வேண்டுகிறேன்.
No comments:
Post a Comment