மனித நேயமிக்க மண்ணாம்
பஹ்ரைன் எனும் புனிதமிகு
முத்துத்தீவில்,மதத்தின்
பெயரால்,மதம் கொண்ட
அத்துமீறல்கள் இல்லை..
காழ்ப்பில்லா மண்ணில்
காமாலைக் கண் கொண்ட
கயவன் ஒருவன் ,பர்தா
பெண்ணை,தன் உணவகத்தில்
அனுமதிக்க மறுத்தானாம்..
வேற்றுமையில் ஒற்றுமை
காணும்,பாரத தேசத்தவனாம்
அவன்.வெக்கித்தான் போனோம்..
அவள் முகம் காண எழுந்த
அரிப்பா உனக்கு?இல்லை
சங்பரிவார் எனும்,நாக்பூர்
கும்பலின்,தீவிரக் கொள்கை
பிடிப்பா உனக்கு..?
உன் வயிற்றுப் பசிக்கு
உணவளித்த மண்ணின்
பெருமை அறியாதவனே..
மனிதத்தை புரியாதவனே
உன் மூளையை சலவை
செய்தவன்,இந்திய மண்ணில்
அதிகார மாடத்தில்..நீயோ
பஹ்ரைனின் சிறைக் கூடத்தில்..
முகமூடிய பெண்ணால் ஆபத்து என்று ,
அகமூடிய அறிவிலியே,
சங்கீகளால் மங்கிப்போன உன்
அறிவை தீட்டிடு.. மனிதத்தோடு
உன் நேசக்கரத்தை நீட்டிடு...
No comments:
Post a Comment