நமதூரின் உயர்வுக்கும்
நற்காலை புலர்வுக்கும்
வார்டில் நிற்போரில்
நல்லோரை தேர்ந்தெடுத்து
தவறாது வாக்களிக்க
ஊராரை வேண்டுகிறேன்..
ஊரின் செழுமைக்கும்
குடிமக்கள் வளமைக்கும்
நல்ல தலைமைக்கும்
நிர்வாக புதுமைக்கும்
வாக்களிக்க வேண்டுகிறேன்..
தரமானவருக்கும்,உதவும்
கரமானவருக்கும்,நிழல்
தரும் மரமானவருக்கும்
வாக்களிக்க வேண்டுகிறேன்..
நெஞ்சுரம் கொண்டோருக்கும்
நேர்வழி நின்றோர்க்கும்
கூர்மதி கொண்டோருக்கும்
வாக்களிக்க வேண்டுகிறேன்..
ஐந்தாண்டு சேவகனை
ஆய்ந்தே தேர்வு செய்து
ஓய்ந்திடாத ஊழியனை
இனம் கண்டு,குணம் கண்டு
வாக்களிக்க வேண்டுகிறேன்..
அவரத்தர் பஷீரா..
ஆளுமை மிக்கவள்..
ஆற்றலோடு உழைப்பவள்..
புதுமைப் பெண்ணவள்..
வருவதை தருபவள்..
இருபதில்(வார்டு) நிற்கிறாள்..
ஆதரிக்க வேண்டுகிறேன்..
வாக்களிக்க தூண்டுகிறேன்..
பெரியத்தாவின் மகளுக்கு
தகுதியான தமக்கைக்கு
ஊர் தலைமை வருமென்றால்
புளகாங்கிதம் கொள்வதில்
தவறேதும் இல்லையே..
உறவுக்காரிக்கு ஆதரவு கேட்கும்
அவராத்தர் சிராஜ்..
No comments:
Post a Comment