வீடாண்ட பெண்மக்கள்,
வீரியமாய் நாடாண்ட வரலாறு
நம் தேசத்தில் ஏராளமுண்டு..
இன்று வரை அமெரிக்கா
செய்யாததை,நாம் அன்றே
செய்தோம்..இந்திரா
அம்மையாரை,ஆட்சியில்
அமர்த்தி,அழகு பார்த்தோம்..
மாநில முதல்வர்களாய்,
மேயர்களாய்,நகராட்சி
தலைவிகளாய்,பார்போற்ற,
கோலோச்சிய பெண்கள்
வரலாற்றில் பலருண்டு..
போற்படையிலும் உண்டு,
ஏர் பிடிப்பதும் உண்டு,உயர்
படிப்பிலும் உண்டு,நீதிபதியும்
உண்டு,அதிபதியும் உண்டு..
ஆன்மீக தலைவியும் உண்டு..
எப்பணியானாலும்,அதை
செப்பணி போல செய்யும்
மகளிர் தொடாத துறைகளும்
இல்லை...சிகரமும் இல்லை..
நம் நகராட்சிக்கு மீண்டும்
வரப்போகுது பெண்ணாட்சி..
நல்ல ஆட்சி தந்திட,நல்ல
'ஆச்சி' வரவேண்டும்..
அவாவோடு காத்திருக்கும்
அவராத்தர் சிராஜ்..
No comments:
Post a Comment