வீறுநடை போட்ட சூறாவளியே..
காவிப்படைக்கு நீ தீராவலியே..
தலையின் உட்புறம் உள்ளதை
விசாலமாக்குவது தான் கல்வி.
தலையின் வெளிபுறத்திற்காக
விசனப்படுவது தான் காவி...
படிக்க செல்லும் இடத்தில்
பகட்டுக்கு இடமில்லை
என்று,இளம் கன்றே.! நீ
பர்தாவை அணிந்திட்டாய்..
கறுப்புடையில் உன் கோலம்
கண்டு,வெறுப்படைந்த சில
ஓநாய்கள்,ஓலமிடுகின்றன,
சில கட்சிகள் தாளமிடுகின்றன..
அறநெறியில் சிறந்த,மதவெறி
இல்லா,பெரும்பான்மை இந்து,
முஸ்லீம்,கிருத்துவர்களே,
தேசத்தை திருத்துபவர்கள்..
மதவெறி,மது வெறி கொண்ட
ஜந்துக்களைப் புறந்தள்ளி,
ஹிந்து..முஸ்லீம்..பாய்..பாய்
என்ற,நல்லிணக்கம் கொண்ட
நல்லோரைக் கொண்டாடுவோம்.
No comments:
Post a Comment