அன்பு தம்பி நியாஜே..
வங்காள கடலின் அக்கரையில்
நீ இருந்தாலும்,நமதூரின்
மீதான உன் அக்கறை
வியக்க வைக்கிறது..
மலேயா நாட்டில், நமது
கூத்தாநல்லுருக்கென ஒரு
சங்கம்,அதில் நீயோ முக்கிய
அங்கம்..உன் குரல் பரவியது
GTM இணைய வழியில் எங்கும்
அச்சரம் பயின்ற பள்ளிக்கும்,
அச்சாரம் தந்து, நீ பயின்ற
கல்லூரிக்கும், நன்றிக்கடன்
செய்திட, முன்னாள் மாணவ
சங்கங்களோடு உடன்பட்டாய்..
ஜமாலியன் என்று சொல்வதில்
பெருமை உனக்கு..அதை தக்க
வைக்கும் திறமையும் இருக்கு..
தம்பியே.!மங்காத உன் சமூக
உணர்வோடு,பொன்னான
உன் மனதோடு, நலமோடு
வளமோடு பல்லாண்டுகள்
நீ வாழ மனதார வாழ்த்துகிறேன்..
No comments:
Post a Comment