Friday, 3 December 2021

கால்பந்து என்றாலே


கால்பந்து என்றாலே நினைவுக்கு
வருபவர்கள் தீனாமூணா
நிஜாம் அண்ணன் அவர்களும்,
HR நூர் அண்ணன் அவர்களுமே...

~~~~~~

1950,60 களில் கால்பந்தை
வளர்த்தெடுத்த ஜாம்பவான்கள்
வார்த்தெடுத்த வாரிசுகள் தான்
HRரும், தீனாமூணாவும்..

ஏனோதானோ என்றில்லாமல்
உடல்,பொருள் ஆவியை தந்த
70,80,90களில் விளையாட்டை
ஊக்குவித்த உத்தமர்கள் அவர்கள்..

கிரிக்கெட் சுனாமியில் இருந்து
கால்பந்து விளையாட்டை காத்த
அவர்களையும்,அவர்கள் தந்த
விளையாட்டு விழாக்களையும்
நம்மால் மறக்க இயலுமா...

80 மற்றும் 90களில் பிறந்த
பிள்ளைகளுக்கு,ஊக்கத்தையும்
ஒரு தாக்கத்தையும் தந்தவர்
தீனாமூணா.அவர் மறைந்தாலும்
தேனா இனிக்கும் அவரின்
நினைவுகள் நம் நெஞ்சிலே..

கனவிலும் காண இயலாத
ஆட்ட நாயகர்களை கண்ணில்
காட்டி, நம்மை விண்ணில்
பறக்க வைத்த HR ஐ நன்றியோடு
பாராட்டி,அவர் நூறை கடந்து,
நீடுழி வாழ வாழ்த்துவோம்..

No comments:

Post a Comment