நண்பர் கார்மீரா ஷர்பு மற்றும்
மண்டலக்கோட்டையார் மும்தாஜ்
மகனார் அஸ்ஃபருக்கு நிச்சய
நாள் (21/10/21) வாழ்த்துக்கள்
___________________________________
இளசுகள் இருவர்,திருமணம்
என்னும்,பரிச்சயம் இல்லா
புதுப்பயணம் தொடங்கிட,
உறவுகள் கூடி, அவர்தம்
ஆசிகளோடு,மணநாள் குறிக்கும்
சுபநாளே நிச்சய தினம்..
நிச்சய நிகழ்வில்,இன்று
நுழையும்,மீஸான் தராசின்
நேர்மை குணம் கொண்ட,
அன்புத்தம்பி அஸ்ஃபர் ஜீசானே.!
பெற்றோர்கள் இன்று
உன் மண வாழ்விற்கு
அடித்தளமிடும் நன்னாள்..
உன்னால்,நீ கைகோர்க்கும்
பெண்ணால்,உமதிருவர்
வாழ்வும்,ஒளிர்ந்திடும் நிச்சயம்..
உங்களை பெற்றவர்கள் மனமும்
குளிர்ந்திடும் நிச்சயம்..
உன்னையும்,உன் வாழ்விற்கு
அர்த்தம் சேர்த்திட, வண்ணம்
கூட்டிட, உறுதுணையாய்
உன்னோடு,வரவிருக்கும்
பெண்ணையும்,நிச்சயதார்த்த
நாளன்று வாழ்த்துகிறேன்..
வல்ல ரஹ்மான் அருளோடு
அமோகமாய் ,நிச்சயமாய்
வாழ்ந்திடுவீர் என்பது
நிச்சயம்.. நிச்சயம்..நிச்சயம்.
No comments:
Post a Comment