Saturday, 2 October 2021

KNRians டிவியின் ஓராண்டு நிறைவு விழா.!வாழ்த்துக்கள்.!

தொலைக்காட்சி பெட்டியானது
மழுங்கடிக்கும் தொடர்களால்
மூடருக்கான பெட்டியானது
வதந்`தீ`பரப்பும் தீச்சட்டியானது.. 

காட்சி ஊடகங்கள் இன்று
கட்சிகளின் ஊதுகுழலாய்
மாறிப்போனதால்,ஊடக
தர்மத்தை மறந்துபோனது..

நல்லவைகளை மறைத்து
அல்லவைகளை நிறைத்து
இன்றைய காட்சி ஊடகங்கள்
தன் மாட்சியை இழந்தன..

மாட்சிமையை மீட்டெடுக்கும்
முயற்சியில்,நம் இளைஞர்கள்
அறுவர் இணைந்தனர்,
அறுசுவையோடு,அறிவுச்சுவை 
தர, இணையவழி KNRians
டிவியை,இனிதே நிறுவினர்.. 

எத்தனை எத்தனை விமர்சன 
கணைகள்,மலர்க்கணையாய்
அதை ஏற்று,நூற்றி ஐம்பது
நிகழ்ச்சிகளோடு,ஓராண்டை
வெற்றிகரமாய் கடந்தனர்... 

ஆன்மீகம்,மருத்துவம்,கல்வி
என்று,தார்மீக பொறுப்போடு,
வல்லுநர் பலரின் நேர்காணலை
இரண்டு லட்சம் நேயர்களின்                                                                                                                               
பார்வைக்கு சிறப்புற வைத்தனர்.. 
ஊரின் நலன் நாடும் இந்த
டிவியானது,உலகெங்கும்
பரவிக்கிடக்கும் நமதூர்
மக்களின் இணைப்பு 

பாலமானது,நம் நினைவில்
நிலைத்து,நம் மக்களின்
நாடிதுடிப்பானது...  
பின்னணியில் நின்றுழைக்கும்
நமதூரின் நன்மணிகள் ஐக்கிய

நாட்டில் இருந்து நிலாம்,
அமீரகத்தில் இருந்து தாஹிர்,
அஃப்னான்,மலேயாவில்
இருந்து கமால்,ஊரில் பெரோஸ்,
இவர்தம் எண்ணங்களை
பிரதிபலிக்கும் ஆசிரியர் அலீம்
ஆகியோரை பாராட்டுகிறேன்..

காந்தியார் பிறந்தநாள்
அன்று உதித்து,நேயர்களின்
நெஞ்சில்,நல்லறம் வளர்ப்பதே
கொள்கையாய் கொண்ட, நம்
ஊருக்கான டிவி,உலகிற்கான 

டீவியாய் உருவெடுக்கட்டும்
வல்ல ரஹ்மான் துணை
இருந்து,அருள் புரிவானாக.




No comments:

Post a Comment