பரபரப்புக்கு பஞ்சமில்லா
விறுவிறுப்பான விளையாட்டு,
வெற்றிக்கனியை தொட்டபோதும்
களிப்பில் குதிக்காத,எங்கள்
மதிப்பில் உயர்ந்த தலைவா...
KKR - ரை வென்றபோது
அலையாய் ஆர்பரிக்காமல்
நிலையாய் நின்று,ஆறுதல்
சொன்ன ஜென் துறவியே..
தோற்ற அணியை பெரிதாய்
போற்ற மனம் வேண்டும்,அக்
குணம் கொண்ட உன்னை
'தல' என்று ஏற்றது சென்னை ..
'சீனி'(வாசன்)தந்த CSK யின்
கற்கண்டே..உன் நிழல் கண்டே
எதிரணிகள் அஞ்சிடும் ,உன்
புகழ் கண்டே, ரசிக நெஞ்சங்கள்
மகிழ்ச்சியில் பொங்கிடும் ..
வைகறை நேரத்து மஞ்சள்
வெயிலே, பதினைந்தாவது
IPL ல், உன் கையுறை
பேசவேண்டும்,உனை
கேலிப்பேசியவர் சொல்லை
பொய்யுரை ஆக்கவேண்டும்
No comments:
Post a Comment