Saturday, 7 August 2021

ஈட்டிக்காரன்..!

ஈட்டிக்காரன்..!
கடன் பெற்றவர் பயந்து
ஓடும் நபரல்ல இவன்..

தங்கமகன் நீரஜ்ஜே..
தங்கத்தை கொணர்ந்த
உனக்கு நம் தேசமே
கடன்பட்டுள்ளது...

டோக்யோவில் உன் ஈட்டி
பறந்த தூரம் எண்பத்தியெழு
மீட்டர்,அது கவர்ந்த இதயங்களோ
நாட்டில் நூற்றிமுப்பது கோடி..

உன் நெஞ்சில் தொங்கும்
மஞ்சள் உலோகம், இனி
இந்திய தீபகற்பத்தின்
நெஞ்சில் ஒளிவீசும்...

ராணுவ வீரனே.!உனைப்
போற்றி பாராட்டி,வாழ்த்தி
வரவேற்க, நாடே ஆவலாய்
காத்திருக்கின்றது...

No comments:

Post a Comment