நரியும் திராக்ஷைக் குலைகளும் கதையைக் கேட்காதவர்கள்
இருக்க மாட்டார்கள்.பாவம் அந்த நரி.
சீச்சீ இந்த பழம் புளிக்கும் என்று
சொல்லிவிட்டு தன் அடுத்த
வேலைக்கு சென்று விட்டது..
Constructive வா தன் அடுத்த
வேலைக்கு போய்விட்டது..
நரி என்று சொன்னால் சிலர்
வருத்தப்படலாம். அதனால்
நரியை ஒரு அமைப்பு என்று
நாம் வைத்து கொள்ளலாம்..
திராட்சை கிடைக்கும் என்று
முட்டி மோதி நின்றது அந்த
அமைப்பு.கிடைக்கவில்லை
என்றதும் கோபப்படுவது
நியாயம் தான்..ஆனால் அந்த
அமைப்புக்கு தங்களுக்கு
பழம் கிடைக்கவில்லையே என்ற
கோபத்தை விட, அது தன்னை
போன்ற,வேற ஒரு அமைப்புக்கு
கிடைத்து விட்டதே என்ற கோபம்..
நரியை போல அந்த அமைப்பு
சமூக சீரமைப்பு, கட்டமைப்பு
என்று இறங்கி தன் சேவையை
தொடர்ந்து செய்து, தேவை
இருப்பின் தோட்டகாரரிடம்
எங்களுக்கு இது தேவை
அது தேவை,இது எங்கள்
உரிமை என்று போராடாமல்
தோட்டத்தின் வாயிலில் அமர்ந்து
தோட்டக்காரன் தப்பு செய்யட்டும்
அதை விளம்பரப்படுத்தி பழி
வாங்கிவிடலாம் என்று,கேலியும்
கிண்டலும்,எகத்தாளமுமாக
காத்து கிடக்கிறதாம்...
கொரோனா என்ற பூச்சிகளால்
தோட்டம் அழிந்துவிடக் கூடாது
என்று தோட்டக்காரன் கவலை
பட்டு போர்க்கால அடிப்படையில்
வேலை செய்ய, சில அமைப்புக்கள்
தவறு செய்யட்டும் என்று
காத்திருக்கின்றனவாம்..
தோட்டக்காரன் பதவி ஏற்று
ஒரு மாதம் தான் ஆகியுள்ளது..
சொன்னதை செய்யவில்லை
என்றால் மாற்றப்படுவான்..
முதலிரவு அன்றே பிள்ளை
பிறக்கவேண்டும் என்று எதிர்
பார்ப்பது அறிவுடைமை ஆகாது..
No comments:
Post a Comment